கனடா அரசின் புதிய நடவடிக்கைகள்! 1.7 பில்லியன் திட்ட அறிவிப்பு..
கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் முதல் பட்ஜெட்டில், உலகத் தரமான ஆய்வாளர்களை ஈர்க்கும் நோக்கில் 1.7 பில்லியன் கனேடிய டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 1,000ற்கும் மேற்பட்ட உயர் திறமையுள்ள ஆராய்ச்சியாளர்கள் கனடாவுக்கு வரவழைக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
100,000 டொலர்
அமெரிக்காவில் H-1B விசா கட்டணம் 100,000 டொலராக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கனடா H-1B விசா வைத்துள்ளோருக்கான "விரைவான பாதை"யை தொடங்கவுள்ளது.

இது அமெரிக்காவில் உள்ள திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களை கனடாவுக்கு ஈர்க்கும் முயற்சியாகும். இதே நேரத்தில், தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை 40 சதவீதம் குறைக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் study permit-கள் 2026 முதல் ஆண்டுக்கு 155,000-ஆக குறைக்கப்படும்.
கனடாவின் பொருளாதார வளர்ச்சி
இது முந்தைய அரசு திட்டத்தில் இருந்த 305,900 பர்மிட்களுடன் ஒப்பிடுகையில் பாதியாகும். 2026 முதல் 2028 வரை, ஆண்டுக்கு 380,000 புதிய நிரந்தர குடியாளர்களை (Permanent Residents) ஏற்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தற்காலிக குடியிருப்பாளர்களின் (Temporary Residents) பங்கு 2027-க்குள் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என அரசு இலக்கை நிர்ணயித்துள்ளது.
இந்த மாற்றங்கள் கனடாவின் பொருளாதார வளர்ச்சி, வீட்டு வாடகை கட்டுப்பாடு மற்றும் ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கும் என முன்னணி கனேடிய நிதி நிறுவனமான Desjardins-ன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.