கனடாவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழர்! பொலிஸார் வெளியிட்ட தகவல்
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் Vancouver சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இலங்கையை சேர்ந்த தமிழருடையது எனவும், 64 வயதானவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த மாத ஆரம்பத்தில் காணாமல்போனதாக கூறப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ரோயல் கனேடியன் மவுன்ட் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொலிஸார் வெளியிட்ட தகவல்
மேலும், கடந்த மாதம் 9ஆம் திகதி காணாமல் போனதாக முறையிடப்பட்டபோது அவர் அதிக போதையில் இருந்ததாகவும் பொலிஸாரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும் இவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிடவில்லை என்பதுடன், அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.