அடுத்த வாரம் ஏற்படும் அலையை தடுப்பூசியால் தடுக்க முடியாது! வெளியான தகவல்
தடுப்பூசியாலும் கோவிட் பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் லக்குமா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சூம் தொழிற்நுட்பம் ஊடாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் இதனை கூறியுள்ளார்.
வேகமாக தடுப்பூசிகளை வழங்கும் உலகில் ஏனைய நாடுகளை விட நாம் முன்னிலையில் இருக்கின்றோம்.எனினும் தடுப்பசி வழங்கும் செயற்பாடுகளில் கூடிய பலனை பெற முன்னர் நாம் இந்த துரதிஷ்டவசமான நிலைமை எதிர்கொண்டுள்ளமை குறித்து கவலையடைக்கின்றேன்.
இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையால், அடுத்த வாரம் ஏற்படும் அலையை நிறுத்த முடியாது.எதிர்காலத்தில் வரும் அலையை இந்த தடுப்பூசியால் நிறுத்த முடியும்.
நாம் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகளை நீக்கிய போது தெமட்டகொடை பிரதேசத்தில் டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டது.
தற்போது எம்மை சுற்றியுள்ளவர்களில் பலருக்கு கோவிட் வைரஸ் இருக்கின்றது. தீர்மானங்களை எடுக்க தாமதமானது இந்த நிலைமைக்கு பிரதான காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.