கொத்து ரொட்டியை தயாரிப்பது போல் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க முடியாது - நீதியமைச்சர்
ஒரு நாடு ஒரு சட்டம் என்ற வரையறை குறித்து அரசாங்கத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும், முன்நோக்கி செல்லும் போது அவசியமற்ற சட்டங்கள் இருந்தால் அவற்றை நீக்க தயார் எனவும் நீதியமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார்.
கொத்து ரொட்டியை தயாரிப்பது போல் உடனடியாக புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர முடியாது எனவும், இது குறித்து சமூகத்திற்கு விளக்கப்பட்டு கலந்துரையாடல்களை ஏற்படுத்த வேண்டும் எனவும், சகல இனங்களின் உதவியுடன் சிறந்த நாட்டை உருவாக்க அதனை சரியான முறையில் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அனைத்து தரப்பினரின் ஆதரவு அவசியம். சட்டத்தை மாத்திரமல்ல, அதனை செயற்படுத்துவதில் துரிதம், இலகு மற்றும் குறைந்த செலவு முறையும் அவசியம். சட்டத்தின் ஆதிபத்தியம் தொடர்பாக பிரஜைகளின் நம்பிக்கையை அத்தியாவசியமானது எனவும் நீதியமைச்சர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போதே நீதியமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
