தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடைக்குமா?

Sri Lanka Tamil Nadu Refugees Citizenship
By Murali Aug 11, 2021 07:36 PM GMT
Report
Courtesy: BBC Tamil

 இலங்கை அகதிகள் தங்களுக்கு இந்திய குடியுரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால், அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் உறுதி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் வாழ்க்கைத்தரம், அடிப்படை வசதிகள் குறித்து அறிய பல்வேறு அகதிகள் முகாம்களிலும் ஜெசிந்தா லாசரஸ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமை ஜெசிந்தா இன்று பார்வையிட்டார். பின்னர் இலங்கை அகதிகள் வசிக்கும் வீடுகளுக்குச் சென்று அங்குள்ளவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

தங்களுக்கு இந்திய குடியரிமை வழங்க வேண்டும், வசிப்பிட பகுதிகளில் போதுமான குடிநீர், மின் விளக்கு, சாலை வசதி, வீடு, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பெரும்பாலனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த ஆய்வின் போது மனு அளிக்க வந்த இலங்கை அகதி ஜெகன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "நான் 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின் போது கடல் வழியாக ராமேஸ்வரம் வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ளேன்.

எனக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு அளித்துள்ளேன். ஆனால் சட்டவிரோதமாக கடல் வழியாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என தெரிவித்து விட்டனர்," என்றார்.

அகதிகள் கோரிக்கை என்ன?

"விமானம் மூலம் உரிய ஆவணங்களுடன் இலங்கையில் இருந்து வந்து இந்தியாவில் தங்கி உள்ளவர்களுக்கும் இதுவரை இந்திய குடியுரிமை அளிக்கப்படவில்லை. எனவே மத்திய மாநில அரசுகள் இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்," என்று அவர் கேட்டுக் கொண்டார்.

"அகதிகள் முகாம்களுக்குள் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், சாலை, கழிப்பிட வசதி உள்ளிட்டவை மோசமாக உள்ளன. இது குறித்து ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முறையிட்டார் ஜெகன்.

"எங்களது பிள்ளைகள் கல்லூரி படிப்பிற்காக வெளி மாவட்டங்களுக்கு செல்கின்றனர். அப்படி செல்பவர்களுக்கு தணிக்கை செய்வதில் இருந்து 3 முதல் 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

பட்டப்படிப்பு முடித்த பிள்ளைகளுக்கு இலங்கை அகதி என்பதால் பல இடங்களில் வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் அவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு அரசு வேலைவாய்ப்பு கிடைக்க மாநில அரசு உதவ வேண்டும் என்றும் ஜெகன் வலியுறுத்தினார்.

இந்திய மருத்துவ கல்வி பயில நீட் தேர்வு நடைபெறுகிறது. அதில் இந்திய மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அவர்களை போல் இலங்கை அகதி மாணவர்களும் தேர்வு எழுத அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஜெகன் கேட்டுக் கொண்டார்.

தமிழக அரசு என்ன செய்கிறது? .

முன்னதாக, இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஜெசிந்தா லாசரஸ், "தமிழகம் முழுவதும் பல இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட ஆய்வில், 80 சதவீதம் பேர் இந்தியாவிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உதவும்படியும் அவர்கள் கேட்டுள்ளனர்," என்று கூறினார். "தாயகத்துக்கே திரும்பிச் செல்ல விரும்புவோர், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் பட்சத்தில் அவர்களை கணகெடுத்து மத்திய அரசு அனுமதி பெற்று இலங்கைக்கு திருப்பி அனுப்ப மாநில அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் தெரிவித்தார்.

"தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதி கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை.

வரும் காலங்களில் மத்திய அரசு அனுமதி வழங்கினால் இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்று ஜெசிந்தா லாசரஸ் தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் இலங்கை அகதிகள் கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு செல்வது அதிகரித்துள்ளதால் அதை தடுக்க கடல் பாதுகாப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அகதிகள் நல மறுவாழ்வு துறை அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US