தமிழ் பொது வேட்பாளருக்கான பிரசாரம் வடமராட்சி கிழக்கில் தீவிரம்
தமிழ் பொது வேட்பாளருக்கான பரப்புரை நடவடிக்கைகள் வடமராட்சி கிழக்கிலும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சங்கு சின்னத்தில் போட்டியிடும் பா.அரியநேந்திரனை ஆதரித்து வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நேற்று (06.09.2024) பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் ஆதரவு
தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு மக்கள் இடையே பெருகிவருவதாக தெரிவித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் ஜனநாயக போராளிகள் கட்சியை சேர்ந்தவருமாகிய ஆனந்தராசா சுரேஷ்குமார் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு பொது வேட்பாளருக்கு அமோக ஆதரவை வழங்க வேண்டுமெனவும் தமிழ் மக்களை கேட்டுக் கொண்டார்.
இதில் ஜனநாயக போராளிகள் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், மணல்காடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர், தாளையடிகடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
