புதுக்குடியிருப்பில் வீதி நடைமுறைகளை பின்பற்ற முன்மாதிரியான விழிப்புணர்வு செயற்பாடு
வீதி நடைமுறை தொடர்பான முன்மாதிரியான விழிப்புணர்வு ஒன்று இன்றையதினம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியில் புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சத்திய ரூபன், புதுக்குடியிருப்பு பொலிஸார், சுகாதார பரிசோதகர்கள் இணைந்து வீதி நடைமுறை தொடர்பாக வீதியில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள், கார் ஏனைய இதர வாகனங்களை நிறுத்தி வாகனப்பட்டி அணிந்திருக்க வேண்டும், தலைக்கவசம் அணிவது, சிறு பிள்ளைகளை மோட்டார் சைக்கிள் ராங்கில் இருத்த கூடாது என வீதி நடைமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
அத்துடன், வீதி விபத்துக்களால் ஏற்படும் விபரீதங்கள் தொடர்பாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








