யாழில் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரசார நடவடிக்கைகள் முன்னெடுப்பு
சாவகச்சேரி
நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் அதிக அளவிலான வாக்குகளை தமிழ் வேட்பாளர் பெறுவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், இன்றையதினம் (09) சாவகச்சேரி நகர் பகுதியில் தமிழ்பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு (Ariyanethran) ஆதரவு கோரி தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, வீதியில் சென்ற பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கடமை புரிவோருக்கு தேர்தல் பிரசார துண்டு பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
செய்தி - கஜி
ஊர்காவற்துறை
தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேத்திரனை (Ariyanethran) ஆதரித்து இன்று (09) யாழ்ப்பாணம் (Jaffna) - ஊர்காவற்துறை பகுதியில் பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் அதிக வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஊர்காவற்துறை - தம்பாட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகள் முன்னெடுத்து தேங்காய் உடைக்கப்பட்டுள்ளது.
பூஜை வழிபாடுகள்
இதனை தொடர்ந்து, ஆலய பிரதமகுருவிற்கு சம்பிரதாய பூர்வமாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு பின்னர் ஊர்காவற்துறை நகர பகுதியில் பிரசார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேவேளை, வடக்கு மாகாண கடற்றொழிலாளர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த தேர்தல் பிரசாரத்தில் அகில கடற்றொழிலாளர் இலங்கை மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா, யாழ்.வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் உப தலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம், கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி வைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
















தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 54 நிமிடங்கள் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
