இவர்களை கண்டால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
கடந்த மே மாதம் 20 ஆம் திகதி களுத்துறை தெற்கு தொடருந்து நிலையத்தின் பொல வீதி பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் 7 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நான்கு சந்தேகநபர்களும் தங்களுடைய முகவரிகளை மறைத்து தலைமறைவாகியுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் அல்லது களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரையோ தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சந்தேக நபர்களின் விபரங்கள்
1. பெயர் - கமகே நவீன் டனங்ஜய
தேசிய அடையாள அட்டை இலக்கம் - 973250899v
முகவரி - வல்பிட்ட ,தொடங்கொடை
2. பெயர் -மொஹொமட் அலியர் மொஹொமட் இம்ரான்கான்
தேசிய அடையாள அட்டை இலக்கம் - 892510997v
முகவரி - விக்கிரமசிங்க வீதி , களுத்துறை தெற்கு
3. பெயர் - விமுக்தி வர்ணகுலசூரிய, முகவரி - 132/4 பீ விகார கந்த கிராம சேவகர் பிரிவு
4. பெயர் - விதானகே அஹான் புபுது குமார சில்வா
தேசிய அடையாள அட்டை இலக்கம் - 972182427 v
முகவரி - கித்துலாவளை , களுத்துறை தெற்கு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam