கொக்குத்தொடுவாயில் முக்கிய அகழ்வுப் பணி கண்காணிப்பு கமராவுக்கு மத்தியில்
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவை சிசிடிவி கமரா கண்கானிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்தமாதம் செப்ரெம்பர் (06.10.2023) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அகழ்வு பணிகள் ஒன்பது நாட்களட வரை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் தொடர்ந்து இடம்பெற்றிருந்தது. ஒன்பதாம் நாள் நிறைவுடன் மொத்தமாக 17 எலும்புக்கூட்டுத்தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில் அகழ்வில் ஈடுபட்டிருந்த ராஜ்சோமதேவ குழுவினர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு செல்ல இருப்பதன் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஒக்டோபர் மாதம் மூன்றாம் வாரமளவில் இதே குழுவினரால் மீள ஆரம்பிக்கப்படும் என முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
கண்காணிப்பு நடவடிக்கைகள்
இந்நிலையில் கொக்குதொடுவாய் மனித புதைகுழி சம்பவ இடத்திற்கு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் சிசிடிவி கமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போதுள்ள காலநிலை மாற்றத்தால் தொடர்ச்சியாக அகழ்வுபணி நடைபெறுமா? அல்லது இடைநடுவில் விடப்படுமா என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி முல்லைத்தீவு இது குறித்து தெரிவித்திருந்ததாவது, நிதி இல்லாத காரணத்தினால் அகழ்வு பணி நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாகவும், உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும் தாமதமாவதற்கான சாத்திக்கூறுகளே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.