எல்லை பாதைகளை அதிரடியாக மூடிய நாடு.. ட்ரம்பின் கருத்துக்கு முரணாய் ஆசியாவில் தீவிரமடையும் போர்!
கம்போடியா, தாய்லாந்துடனான தனது எல்லைக் கடப்புகளை மூடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறிய போதிலும், இரு படைகளுக்கும் இடையே மோதல் தொடர்ந்தது.
இந்நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை கம்போடியாவின் எல்லைக் கடவைகள் மூடப்படும் என்று கம்போடியாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல், கம்போடியா தனது அனைத்துப் படைகளையும் திரும்பப் பெற்று, கண்ணிவெடிகளை அகற்றிய பின்னரே போர்நிறுத்தம் சாத்தியமாகும் என்று ட்ரம்பிடம் கூறியதாகக் கூறினார்.
தாக்குதல்கள்
இரு தரப்பினரும் தொடர்ந்து குண்டுவெடிப்பு மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவித்த நிலையில், சனிக்கிழமை நான்கு வீரர்கள் கொல்லப்பட்டதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், கம்போடியா தனது இராணுவ உயிரிழப்பு புள்ளிவிவரத்தை புதுப்பிக்கவில்லை. கம்போடியாவின் பாதுகாப்பு அமைச்சகம், தாய்லாந்து போர் விமானங்கள் ஹோட்டல் கட்டிடங்கள் மற்றும் ஒரு பாலத்தின் மீது குண்டு வீசியதாகக் கூறியது, அதே நேரத்தில் கம்போடிய ராக்கெட் தாக்குதலில் பல பொதுமக்கள் காயமடைந்ததாக தாய்லாந்து தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை நான்கு இறப்புகளுடன், திங்கட்கிழமை முதல் தாய்லாந்தின் மொத்த இராணுவ இறப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 270 பேர் காயமடைந்துள்ளனர்.
அநுரவின் முடிவால் பங்குசந்தையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்! இலங்கையை உலுக்கிய பேரழிவின் பின்னரான நிலை...
ட்ரம்பின் அறிவிப்பு
ஆறு பொதுமக்களும் காயமடைந்துள்ளதாக அது மேலும் கூறியது. வெள்ளிக்கிழமை, கம்போடியா குறைந்தது 11 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 59 பேர் காயமடைந்ததாகவும் கூறியது.

எல்லையின் இருபுறமும் குறைந்தது 700,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். திங்களன்று தாய்லாந்து மற்றும் கம்போடியப் படைகளுக்கு இடையேயான சண்டையை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் நிறுத்த முடியும் என்று ட்ரம்ப் இந்த வார தொடக்கத்தில் கூறியிருந்தார்.
வெள்ளிக்கிழமை இரவு இரு பிரதமர்களுடனும் கலந்துரையாடிய பிறகு, இரு நாடுகளும் "இன்று மாலை முதல் துப்பாக்கிச் சூட்டை நிறுத்த" ஒப்புக் கொண்டதாகவும், ஒக்டோபரில் அமெரிக்க ஜனாதிபதி முன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்குத் திரும்புவதாகவும் அவர் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், "இரு நாடுகளும் அமைதிக்குத் தயாராக உள்ளன" என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்த போதும், அமெரிக்க ஜனாதிபதியுடன் பேசிய பிறகு அவர்கள் தெரிவித்த கருத்துக்களில், இரு தரப்பினரும் உடனடி போர்நிறுத்தம் பற்றி சுட்டிக்காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டபுள் எலிமினேஷன்.. பிக் பாஸ் 9ல் இருந்து சற்றுமுன் எலிமினேட் செய்யப்பட்ட இரண்டு போட்டியாளர்கள் Cineulagam