சவேந்திர சில்வாவுக்கு பிரித்தானியாவில் தடை விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை
மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு (Shavendra Silva) பிரித்தானியாவில் தடை விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் Eastham, பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் டிம்ஸ் (Stephen Timms) இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தவர்களை தண்டிக்க இந்த தடை பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா உரிய நேரத்தில் இந்த தடையை விதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது பொது மக்கள், வைத்தியசாலைகள், யுத்தசூன்ய பிரதேசம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், சவேந்திர சில்வா தலைமை தாங்கிய 58ஆவது படையணியால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு சவேந்திர சில்வா, இலங்கையின் இராணுவத்தளபதியாக தரமுயர்த்தப்பட்டார்.
இந்த பதவியுயர்வு அறிவிக்கப்பட்டமையை அடுத்து மனித உரிமை மீறல் விடயத்தில்
சம்பந்தப்பட்டமை தொடர்பில் நம்பத்தகுந்த தகவல்கள் இருப்பதாக கூறி, அமெரிக்கா அவருக்கு தடையை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri