அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு அழைப்பு
தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தினை காப்பாற்றும் பொருட்டு அனைத்துக் கட்சிகளும் ஓரணியின் கீழ் பயணிக்க முன்வர வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (07.10.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா தெரிவிக்கையில்,
“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வடக்கு கிழக்கு மக்களைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, எமக்கான பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றும் பொருட்டு அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.
அத்துடன், பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கும் கட்சிகள் முன்வர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam