வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும், பொலிஸாரின் அராஜகத்தை கண்டித்தும் வவுனியாவில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது நாளை (16.03.2024) காலை 10 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக இடம்பெறவுள்ளது.
பொலிஸாரின் அராஜகம்
சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஆலய பூகர் உள்ளிட்ட 8 பேரை பொலிஸார் அராஜகமாக கைது செய்து பொய் குற்றச்சாட்டு சுமத்தி விளக்கமறியலில் உள்ளனர்.
அவர்களில் 5 பேர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும் என கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன் வெடுக்குநாறி மலை அநீதிக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மக்களை அணிதிரளுமாறு வேலன் சுவாமிகளும் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
