இராணுவத்தை அழைக்குமாறு பொலிஸாருக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து
யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துள்ள போதைப்பாவனை உட்பட்ட சட்டவிரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரிடம் ஆளணிப்பற்றாக்குறை இருக்குமானால் இராணுவத்தின் உதவியை பெறமுடியுமென கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் (02.03.2023) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி முன்னாயத்த கலந்துரையாடலில், மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து அதிகாரிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போது இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு ஆளணி பற்றாக்குறை நிலவுமனால் விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்பை பெற்றேனும் அச்சுறுத்தும் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான பத்திரிகையின் கண்ணோட்டம்,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
