அடுத்த மாதம் இறுதி முடிவு! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்படும் மின்கட்டணம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களின் கருத்துக் கோரும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் ஜூன் முதலாவது அல்லது இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படுமெனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மின்கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரையை பரிசீலனை செய்துவருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இறுதி முடிவு
இதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்படும் மாற்றுப் பரிந்துரை தொடர்பான பொதுமக்களின் கருத்துக் கோரும் நடவடிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

9 மாகாணங்களையும் உள்ளடக்கி 23 ஆம் திகதி முதல் வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களையும் பரிசீலித்த பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri