பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக யாழில் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு

Jaffna SL Protest
By Rakesh Oct 03, 2023 08:51 AM GMT
Report

பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நாளை(03.10.2023) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மனித சங்கிலிப் போராட்டம் மருதனார்மடத்தில் காலை 9 மணியளவில் ஆரம்பித்து யாழ்.நகர் வரையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் மாபெரும் மனிதச் சங்கிலியாகக் கைகோர்த்து, நீதி கோரிட திரண்டு வார வேண்டும் என தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிம் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்படும் அரசியல் கட்சிகளே கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

இன்று முதல் காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்

இன்று முதல் காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்


அந்தக் கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாது:-

"எமது சொந்த மண்ணில், முல்லைத்தீவு மாவட்டத்தில், குருந்தூர்மலையில் அமைந்திருக்கும் வரலாற்றுத் தொன்மை மிக்க இந்து ஆலயத்தின் சிதைவுகளையும் சிதிலங்களையும் தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில், பழைய பௌத்த விகாரை ஒன்றின் மிச்ச மிகுதிகளாகவும், எச்ச சொச்சங்களாகவும் உரிமை பாராட்டி, அங்கே பௌத்த விகாரை ஒன்றை கட்டியெழுப்ப பௌத்த சிங்களப் பேரினவாதிகள் முன்னெடுத்து வந்திருக்கும் முயற்சிகளை நீங்கள் அறிவீர்கள்.

துவேச கண்டனங்கள்

பேரினவாதிகளின் ஆக்கிரமிப்புக்கும் அடாவடித்தனத்துக்கும் எதிராக, எமது மக்கள் தரப்பில் காட்டப்பட்ட எதிர்ப்பினால் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், புதிய கட்டுமானங்கள் எதுவும் நிறுவப்படக்கூடாது என்று நீதிமன்று வழங்கிய கட்டளையை மீறி, அவசரம் அவசரமாக புதிய விகாரை ஒன்று, அதிகாரத் தரப்பின் ஆதரவோடு கட்டப்பட்டு, முற்றுப்பெறும் நிலையில் எழுந்து நிற்கின்றது.

இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, தமிழ் மக்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட முறையீடுகளின் பேரில், அவற்றை நிறுத்த முயன்ற மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவை அடிபணிய வைக்க முயன்று, முடியாமல் போன இனவாத சக்திகள், நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தின் உள்ளும் புறமும் துவேசக் கண்டனங்களையும் கீழ்த்தரமான விமர்சனங்களையும் வெளியிட்டு பிரச்சாரப் போர் ஒன்றை தொடுத்து வந்திருந்தன.

யாழ். சாவகச்சேரியில் சாய்ந்த பழம்பெரும் மரம்: மின்சாரத்திற்கு தடை (Photos)

யாழ். சாவகச்சேரியில் சாய்ந்த பழம்பெரும் மரம்: மின்சாரத்திற்கு தடை (Photos)


இந்தச் சூழ்நிலையின் உச்சக்கட்டமாக, அதிகார மட்டத்தில் இருந்து அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நீதிபதி மீது பிரயோகிக்கப்பட்டன.

இந்தக் கேவலமான நடவடிக்கைகளுக்கு மனோ ரீதியாகத் தொடர்ந்தும் தாக்குப் பிடித்து நிற்க முடியாத நிலையில், நீதிபதி சில தினங்களுக்கு முன்னர் தனது பதவியைத் துறந்து, நாட்டை விட்டே வெளியேறிச் சென்றுள்ளார்.

இத்தனைக்கும் அவர் செய்த ஒரே தவறு, வளைந்து கொடுக்காமல், அடிபணியாமல் துணிச்சலோடும் நேர்மையோடும் தனது கடமையை சட்டத்தின் வழி நி;ன்று செய்ததே ஆகும். ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் இருப்புக்கும், உரிமைக்கும், வாழ்வுக்கும் துணை நின்றே அவர் இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளார்.

இது மிகப் பாரதூரமான நிலைமை! துன்பத்தில் துவளும் எமது மக்களின் கடைசி நம்பிக்கையாக ஓரளவுக்கேனும் இருந்து வந்திருக்கும் நீதித்துறைக்கே சவால் விடுக்கப்படும் அபாயகரமான நிலைமை!! இதனை நாம் எல்லோரும் கைகட்டிப் பார்த்திருக்க முடியாது. எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.

சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை! கடும் கோபமடைந்த ரணில் (Video)

சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை! கடும் கோபமடைந்த ரணில் (Video)


இந்தச் சூழ்நிலையில், இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களின் இருப்பும், அடிப்படை உரிமைகளும் தொடர்ந்தும் குறிவைத்துத் தாக்கப்படுவதை உலகத்தின் கவனத்திற்கு மீண்டும் தீவிரமாக நாம் கொண்டு செல்ல வேண்டும்.

உரிமைக் குரல்கள்

இலங்கை அரசின் பேரினவாத அரசியல் சித்தாந்தமும், நிகழ்ச்சி நிரலும் எம் மீது அராஜக அடக்குமுறைகளாக மீண்டும் மீண்டும் பாய்வதை, உலகின் கண்களுக்கு முன் நாம் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்.

செய்யக் கூடாததை எல்லாம், எண்ணிக்கையில் சிறுபான்மையினராக வாழும் தமிழ் பேசும் மக்களுக்குச் செய்து கொண்டு, நாகரிக நடத்தை கொண்ட நல்ல பி;ள்ளையாக வெளியுலகுக்கு முன் நாடகமாடும் இலங்கை அரசின் வஞ்சகத் தந்திரங்களையும், பொய்கள் நிறைந்த பிரசாரத்தையும் நாம் அம்பலப்படுத்த வேண்டும்.

ஆகவே, ஓரணி திரண்டு, நேர்வழி நின்று நீதி கோரி நாம் எழுப்பும் உரிமைக் குரல்கள் ஆக்ரோசத்துடன் ஆர்ப்பரித்து எழவேண்டும்.

எனவேதான், தொடர்ந்து கொண்டிருக்கும் பேரினவாத ஆக்கிரமிப்புக்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் அராஜகத்துக்கும் எதிரான எமது மக்களின் எதிர்ப்பியக்கத்தின் முதற்கட்டமாக நாளை 4ஆம் திகதி புதன்கிழமை காலை 9 மணியளவில் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ். நகர் வரையில், காங்கேசன்துறை வீதி வழியாக, மாபெரும் மனிதச் சங்கிலியாக கைகோர்த்து, நீதி கோரிட திரண்டு வாருங்கள் என உங்கள் அனைவரையும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளாகிய நாம் உரிமையுடன் அழைக்கின்றோம்.

மேலும், எம் மக்கள் மத்தியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மனித உரிமை அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உட்பட மாணவர் அமைப்புக்கள், மகளிர் உரிமை நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், வணிகர் கழகங்கள், சிவில் சமூக நிறுவனங்கள் மற்றும் மத ஸ்தாபனங்கள் உட்படப் பல்துறை சார்ந்த செயற்பாட்டு இயக்கங்களின் ஆதரவையும் பங்களிப்பையும் இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் நாம் நாடி நிற்கின்றோம். எங்கள் கைகள் இணையட்டும்! அடிமை விலங்குகள் உடையட்டும்! என குறிப்பிடப்பட்டுள்ளது. 

பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக யாழில் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு | Call For Protest In Jaffna

துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

இதேவேளை நாளை முன்னெடுக்கப்படவுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு கோரி சுன்னாகம் பகுதியில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGallery
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US