சிஐடி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட சிவில் செயற்பாட்டாளர்
மட்டக்களப்பு மாவட்ட சிவில் செயற்பாடாளர் லவக்குமாருக்கு சி.ஐ.டி. விசாரணைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் “மட்டக்களப்பு மாவட்ட சி.ஐ.டி.யினரால் நாளையதினம் (27.01.2024) நான் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளளேன்” என லவக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விசாரணைக்கு அழைப்பு
'' இன்றைய தினம் (26.01.2024) காலை 8 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் சிறுகுற்றப்பிரிவுக்குப் பொறுப்பாக இருக்கின்ற பொலிஸ் பொறுப்பதிகாரியிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் “27ஆம் திகதி காலை 11 மணிக்கு சி.ஐ.டி யினர் உங்களை விசாரணை ஒன்றுக்காக மட்டக்களப்புககு வருமாறு அழைத்துள்ளார்கள். ஆகவே நீங்கள் அங்கு செல்ல வேண்டும். அதற்குரிய தகவலை நாம் நேரில் கொண்டுவருவோம்” என அவர் தெரிவித்தார்.
அற்கிணங்க இன்று மாலை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் வருகை தந்து விசாரணைக்குரிய அழைப்புக் கடிதத்தை தந்தார்கள்.

இதற்கமைய “நாளையதினத்தில் மட்டக்களப்பு சி.ஐ.டி.யினரால் விசாரணைக்காக நீங்கள் அழைக்கப்பட்டிருக்கின்றீர்கள். எனவே நாளைய தினம் நீங்கள் அங்கு செல்ல வேண்டும்” என அவர்கள் தெரிவித்தார்கள்.
பொலிஸார் பயன்படுத்தும் யுக்தி
அந்த அழைப்புக் கடிதம் சிங்களதிலே எழுதப்பட்டிருந்தது. எனக்கு சிங்களம் தெரியாது என நான் அந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களிடம் கூறினேன்.நாங்கள் கடிதம் தந்துவிட்டோம் என தெரிவித்து சென்றார்கள்.

அதற்கமைய கடந்த மாவீரர் தினத்திற்காக எனக்கு கொண்டுவரப்பட்ட தடை உத்தரவும், இரவு வேளையிலேதான பொலிஸாரால் எனக்கு கொண்டு தரப்பட்டது.
அதுபோன்றுதான் இந்த கடிதத்தையும் மாலை வேளையில் பொலிஸார் கொண்டு வந்தார்கள். இது பொலிஸார் பயன்படுத்தும் ஒருவித யுக்தியாகவே நான் கருதுகின்றேன்.
நான் சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கு முடியாத வகையில் சட்ட ஆலோசனைகளைத் தடுப்பதற்காகவுமே பொலிஸார் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள்” என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri