தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கம் விடுத்துள்ள அழைப்பு

Missing Persons K. Annamalai
By Thileepan Apr 04, 2024 01:28 AM GMT
Report

இந்துக் கோவில்களை சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க பிரதமர் மோடியின் உதவியை நாடுங்கள் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

வவுனியாவில் தொடர்ச்சியாக உணவுத்தவிர்ப்பு போராட்டம் மேற்கொண்டுவரும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் நேற்று (03.04.2024) ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்று பல தலைவர்கள் கூறியும் தமிழ் நாட்டிலுள்ள பாரதிய ஜனதா கட்சி தமிழ் இனப்படுகொலை விவகாரத்தில் மௌனம் காக்கின்றது.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கம் விடுத்துள்ள அழைப்பு | Call By The Association Of Missing Persons

அவர்கள் தமிழர் ஆதரவை நாடினால், இனப்படுகொலையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, இந்திய நாடாளுமன்றத்தில் அதனை அங்கீகரிக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி தன்னை இந்து மதத்தின் பாதுகாவலராக சித்தரிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சித் தலைவர் அமித்ஷா இருவரும் தங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் இந்து மதத்தின் மீது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள்.

அண்ணாமலை அவர்களே, சிங்கள பௌத்தர்களால் குருந்தூர்மலை, வெடுக்குநாறி, கிண்ணியா வெந்நீர் ஊற்றுகள் மீது அண்மைக்காலமாக இடம்பெற்ற ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் நாம் அச்சமடைந்துள்ளோம். இந்த விஷயத்தில் நீங்கள் ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள். நீங்கள் பௌத்தரா அல்லது இந்துவாக அடையாளப்படுத்துகிறீர்களா என்பதை அறிய விரும்புகிறோம்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கம் விடுத்துள்ள அழைப்பு | Call By The Association Of Missing Persons

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உண்மையிலேயே தன்னை ஒரு பெருமைமிக்க தமிழ் இந்து என்று கருதினால், தமிழினப்படுகொலையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்குமாறு மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷாவை வலியுறுத்த வேண்டும்.

தமிழ் இந்து கோவில்களை விட்டு விலகுமாறு சிங்களவர்களை கேட்க வேண்டும். இந்து கோவில்களின் நீண்டகால பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பிரதமர் மோடியும் அமைச்சர் அமித்ஷாவும் ஒரே இரவில் காஷ்மீரின் அரசியலமைப்பை மாற்றினார்கள்.

இலங்கையிலும் ஒரே இரவில் அதனை செய்ய முடியும். அப்படி நடந்தால் தமிழக தமிழர்கள் அனைவரும் பாஜகவை ஆதரிப்பார்கள் என்றனர்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கம் விடுத்துள்ள அழைப்பு | Call By The Association Of Missing Persons

பிள்ளையானின் மூன்று கோடி ரூபாய் வீட்டு விவகாரம்

பிள்ளையானின் மூன்று கோடி ரூபாய் வீட்டு விவகாரம்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US