ஜனாதிபதி கோட்டபாயவின் அழைப்பு - நிபந்தனை விதித்த சஜித்
கலந்துரையாடலுக்கு வருமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு (Sajith Premadasa), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும் அந்த அழைப்பிற்கு நிபந்தனையுடன் இணக்கம் வெளியிட ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் மேற்கொள்ள இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்களுக்கமைய, “நீங்கள் ஏன் அரசாங்கத்தின் சேதன பசளை விவசாயத்தை விமர்சிக்கின்றீர்கள்? இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள்” என ஜனாதிபதி வினவியுள்ளார்.
“சேதன பசளை விவசாயத்திற்கு தான் அல்லது கட்சியினர் ஒருபோதும் எதிர்ப்பு வெளியிடவில்லை. அது தொடர்பில் வெளியாகும் தகவல்களுக்கே எதிர்ப்பு வெளியிடுகின்றோம்” என சஜித் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவரை தொடர்பு கொண்ட பின்னர் அந்த கட்சியின் செயலாளரான ரஞ்ஜித் மத்தும பண்டாரவுக்கு (Ranjith Madduma Bandara) ஜனாதிபதி அழைப்பேற்படுத்தியுள்ளார், சேதனபசளை விவசாயம் தொடர்பில் வினவியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
