அதிக விலைக்கு டைல்ஸ் விற்றால் 1977இற்கு அழைப்பேற்படுத்துங்கள்
அதிக விலைக்கு டைல்ஸ்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கமான 1977க்கு முறைப்பாடு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலுள்ள டைல்ஸ் தட்டுப்பாட்டை சில விற்பனையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சாதகமாக பயன்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் டைல்ஸ் விற்பனை செய்வதாக நுகர்வோரிடமிருந்து முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும், இலங்கையில் உள்ள முன்னணி டைல்ஸ் நிறுவனம் ஒன்று அதிக விலைக்கு டைல்ஸ்களை விற்பது குறித்து வர்த்தகர்கள் மீது முறைப்பாடு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சில டைல்ஸ் விற்பனையாளர்கள் பல்வேறு வண்ண டைல்ஸ்களை வழங்கி நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக குற்றச்சாட்டுகள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
