சுவிஸ் தூதரகத்துடன் கெபே அமைப்பினர் திட்ட பரிசீலனை கூட்டம்
இலங்கை நாட்டுக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் மற்றும் கெபே(CaFFE) அமைப்பினருடைய விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள கெபே அலுவலகத்தில் நேற்றையதினம்(09.06.2025) இடம்பெற்றுள்ளது.
கெபே சார்பில், நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன், நிர்வாக பணிப்பாளர் சுரங்கி ஆரிவன்ச மற்றும் சட்டத் துறை பொறுப்பாளர் ஹரேந்திர பனகல ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
வலுவான உள்ளூர் நிர்வாகம்
குறிப்பாக சமீபத்திய உள்ளூர் தேர்தல்கள், மாகாணசபைகளின் நிலை, மற்றும் உள்ளூர் மட்டத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் ஆளுமை மற்றும் டிஜிட்டல் அறிவு குறித்த கலந்துரையாடல்கள் இதன்போது இடம்பெற்றுள்ளன.

பலதுறை பங்கேற்புடன் கூடிய வலுவான உள்ளூர் நிர்வாகத்துக்காக ஒன்றிணைந்து செயலாற்றுவது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 19 மணி நேரம் முன்
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam