6.5 மில்லியன் ரூபா பெற்ற அமெரிக்க அதிகாரி விளக்கமறியலில்: அம்பலமான தகவல் குறித்து கப்ராலின் அறிவிப்பு
அமெரிக்க அதிகாரியொருவருக்கு அனுமதியின்றி நிதி வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கருத்து தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான குரல் எனும் செயற்திட்டத்திற்கு அமைவாக பல்வேறு விடயங்களை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்றைய தினம் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு அமெரிக்க அதிகாரி ஒருவருக்கு அஜித் நிவார்ட் கப்ரால் அனுமதியின்றி நிதி வழங்கியதாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
6.5 மில்லியன் ரூபா இவ்வாறு குறித்த நபருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது விளக்கமறியலில் உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
எனினும் இந்த குற்றச்சாட்டை அஜித் நிவார்ட் கப்ரால் மறுத்துள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன், தமக்கு எதிராக தவறாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
பசிலின் சொத்துக்கள் பிரபல வர்த்தகர் பெயரில்: அம்பலப்படுத்தப்பட்டுள்ள தகவல் (Video)
3 பில்லியன் ரூபா மோசடியுடன் சஜித் தொடர்பு! இன்று அனுர வெளிப்படுத்தியுள்ள அதிர்ச்சி தகவல் (Video)
காணாமல் போன புத்த பெருமானின் தங்கச் சிலை! வெளிச்சத்திற்கு வந்த தகவல்கள்
தென்னிலங்கை அரசியலை ஆட்டம் காண வைத்த அநுரவின் ஆவணம்! மைத்திரி வழங்கும் விளக்கம்
இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam