தென்னிலங்கை அரசியலை ஆட்டம் காண வைத்த அநுரவின் ஆவணம்! மைத்திரி வழங்கும் விளக்கம்
அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி நபர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது தார்மீக அரசியல் செயல் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தனது தனிப்பட்ட செயலார் சமீர டி சில்வாவின் ஊடாக அவரது முகநூல் தளத்தில் கடிதம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில்,
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் கொள்ளையிடப்பட்ட பணத்தில் ஒரு பகுதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக ஊழல் ஒழிப்பு குரலின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்கவினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி நபர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது தார்மீக அரசியல் செயல் அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தீங்கிழைக்கும் கருத்து குறித்து எதிர்காலத்தில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய ஊடக சந்திப்பில் பல அரசியல் முக்கியஸ்தர்கள் மேற்கொண்ட இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட ஆவணங்கள் தென்னிந்த அரசியலில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.




