இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பெறும் சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
அதிகம் மத்திய வங்கியின் ஆளுநராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள அஜித் நிவாட் கப்ரால் மற்றும் முன்னாள் ஆளுநர்களுக்காக, இலங்கை மத்திய வங்கி, ஓய்வூதிய நிலுவையாக 70 லட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் தற்போதைய ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், தமது முன்னைய சம்பளத்தில் 74 வீதத்தை ஓய்வூதியமாகவும் மாதத்துக்கு 4லட்சம் ரூபாவை சம்பளமாகவும் பெறுகிறார் என்று கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஆளுநராக இருந்த இந்திஜித் குமாரசுவாமி மாதச் சம்பளமாக 150ஆயிரம் ரூபாவை பெற்றார்.
அர்ஜூன் மஹேந்திரன் 70ஆயிரம் ரூபாவை சம்பளமாக பெற்று வந்தார்.
இந்தநிலையில், அஜித் நிவாட் கப்ரால், தற்போது பெறும் 4லட்சம் ரூபா சம்பள அடிப்படையில் அடுத்த ஓய்வூதியத்தை பெறவுள்ளார்.

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
