இலங்கையில் அறிமுகமாகும் முதலாவது கேபிள் கார்: சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்
இலங்கையின் மத்திய மலைநாட்டில் முதலாவது கேபிள் கார் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டத்திற்காக முதலீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த தகவலை இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலர்கள் முதலீடு
சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள பல்லுயிர் பெருக்க வளாகம் மற்றும் இலங்கையின் முதலாவது பல மத சங்கம இடமாக விளங்கும் அம்புலுவாவவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கேபிள் காரானது சீனாவின் சர்வதேச கட்டட இயந்திர கூட்டுத் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு நிபுணத்துவத்தினைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்படவுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
மேலும், இந்தத் திட்டத்திற்காக சுமார் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த இளம் தாய் மரணம்: மனதை உருக்கும் துயர சம்பவம் - செய்திகளின் தொகுப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
