அமைச்சரவையில் மாற்றம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவையில் மாற்றம் ஒன்றை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் குறித்து தற்போது தீவிரமாக பரிசீலித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மறுசீரமைப்பின் போது, முக்கியமான சில அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் தரப்பில் இருந்து
அண்மைய நாட்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சில விடயங்களும், இந்த அமைச்சரவை மறுசீரமைப்புக்கு காரணமாக அமையக்கூடும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

எனினும், எந்த அமைச்சுப் பதவிகள் மாற்றப்பட உள்ளன என்பது குறித்து இதுவரை இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இந்த விவகாரம் தொடர்பில் ஆளும் தரப்பில் இருந்து அதிகார பூர்வமாக எவ்வித அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 18 மணி நேரம் முன்
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam