தனது அரசாங்கத்தின் தோல்வியை கண்டுபிடித்த கோட்டாபய! அவரே பகிரங்கப்படுத்திய தகவல்
உரிய அமைச்சர்களை நியமிக்க அரசாங்கம் தவறியமையே அரசாங்கத்தின் தோல்விக்கு காரணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலமைப்பின் பிரகாரம் தனது அமைச்சரவையை 30 அமைச்சர்களாக மட்டுப்படுத்துவேன் எனவும், அமைச்சரவையில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்து வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலுள்ள 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஒரே குழுவாக இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அனைத்து பின்னடைவுகளையும் குழுவாக நிவர்த்தி செய்வது கூட்டுப் பொறுப்பாகும்.
குறைபாடுகளை மாத்திரம் விமர்சித்தால் அது குறித்த நபரின் திறமையின்மையையே வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மக்கள் சார்பாக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பது எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கம் தொடர்பில் ஜனாதிபதி மேலும் பல கருத்துக்களை வெளியிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகித்து அரசாங்கம் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது தொடர்பில் அதிருப்தி தெரிவித்த ஜனாதிபதி, உரிய அமைச்சர்களை நியமிக்க அரசாங்கம் தவறியமையே அரசாங்கத்தின் தோல்விக்கு காரணம் எனவும் தெரிவித்தார்.
இவ்வாறானவர்களை அரசாங்கத்தில் இருந்து நீக்குவதே பொருத்தமானது எனத் தெரிவித்த ஜனாதிபதி, தற்போது பலர் அமைச்சுப் பதவிகளை நாடி வருவதாகவும், அனைவருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.
வேலை செய்ய விரும்புபவர்கள் பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்தப் பணியைச் செய்யலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆசிய நாடுகள் உட்பட... சில நாட்டவர்களின் விசா அனுமதியைக் கட்டுப்படுத்த பிரித்தானியா முடிவு News Lankasri

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்த்திகாவின் புதிய தொடர்.. சன் டிவியில் விரைவில், ஹீரோ யார் தெரியுமா? Cineulagam
