வாகன இறக்குமதிகளை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானம்
வாகன இறக்குமதிகளை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக பிரதமரின் அலவலகம் அறிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு வரையறுக்கப்பட்ட அடிப்படையிலேனும் வாகனங்களை இறக்குமதி செய்வது இடை நிறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு வாகன இறக்குதிகளை தொடர்ந்தும் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த செலவில் வாகனங்களை இறக்குமதி செய்ய வரையறுக்கப்பட்ட அடிப்படையில் அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்மானம் தொடர்பில் சமூக ஊடங்களில் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.