கட்சி தாவல் தடைச்சட்டத்தின் பின்னரே அமைச்சரவை மாற்றம்
கட்சி தாவல் தடைச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொண்டதன் பின்னரே அமைச்சரவை மாற்றமொன்றை மேற்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றமொன்றை மேற்கொண்டு முக்கிய அமைச்சர்களின் துறைகளில் மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் அண்மைக்காலமாக தீவிர கவனம் செலுத்தியுள்ளது.
அமைச்சரவை மாற்றத்தின் போது
அதன்போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பொறுப்பை தற்போதைய அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தற்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் அதிகாரமிக்க பதவியொன்று வழங்கப்படவுள்ளது.
குறித்த அமைச்சரவை மாற்றத்தின் போது அதிருப்தியுறும் எந்தவொரு அரசியல்வாதியும் எதிர்க்கட்சி வரிசைக்கு தாவுவதைத் தடுக்கும் வகையிலேயே அமைச்சரவை மாற்றத்திற்கு முன்னதாக கட்சித் தாவல் தடைச்சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam