இலங்கை விமான விபத்து: அமைச்சர் வெளியிட்ட தகவல்
வாரியபொல பகுதியில் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
இன்று (26) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விமான விபத்து தொடர்பான குழுவின் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
விமான விபத்து
இந்தநிலையில், விமான விபத்து விமானியின் தவறால் ஏற்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் தெரிவித்த கருத்து பொருத்தமானதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், விமானம் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், விமான விபத்து தொடர்பான அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
எண். 05 போர் விமானப் படைக்கு சொந்தமான விமானிகளின் மேம்பட்ட பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் K-8 விமானம், கடந்த வெள்ளிக்கிழமை காலை குருநாகலின் வாரியபொல பகுதியில் வழக்கமான பயிற்சிப் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் செய்துள்ள வசூல்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
