உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் தொடர்பில் பிரதமர் நாடாளுமன்றில் வெளியிட்ட விடயம்
அமைச்சரவைக் கூட்டத்தில் நாட்டைப் பாதிக்கும் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணங்கள் தொடர்பில் அமைச்சரவை எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை.
அமைச்சரவையின் முடிவு
அமைச்சரவையினால் இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டதாக எவரேனும் குறிப்பிட்டிருந்தால் அது தவறு.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணங்களை ஏற்காதிருப்பது அல்லது தேர்தலை தாமதப்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இந்த விவகாரம் தற்போது இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
