புதிய அமைச்சரவையில் அமைச்சர்களாக நியமிக்கப்படுவோரின் பட்டியல்
அடுத்த வாரம் நியமிக்கப்பட உள்ள அமைச்சரவையில் உள்ளடக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வமற்ற பெயர் பட்டியல் பகிரப்பட்டு வருகிறது.
புதிய அமைச்சரவையில் பழைய முகங்கள்
இதனடிப்படையில், பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன,சீ.பீ.ரத்நாயக்க, வஜிர அபேவர்தன, தம்மிக்க பெரேரா, எஸ்.பி.திஸாநாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த இரண்டு சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த பட்டியலில் அடங்குகின்றனர்.
மனோ கணேசனுக்கும் அமைச்சு பதவி
சிறிய கட்சிகளை சேர்ந்த மனோ கணேசன், ஏ.எல்.ஏ.எம்.அதாவுல்லா, ஜீவன் தொண்டமான் ஆகியோரும் அமைச்சரவையில் நியமிக்கப்பட உள்ளன.
சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைய ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகள் இணங்கவில்லை.
தேசிய அரசாங்கத்தை அமைக்கும் ஜனாதிபதி
இதன் காரணமாக தேசிய அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார்.
இதனடிப்படையில், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் தேசிய அரசாங்கத்தில் இணைய விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.