பாதுகாப்பு படையினருக்கு அரசாங்கம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்
பாதுகாப்புப் படையினருக்கு அரசாங்கம் வழங்கியுள்ள அறிவுறுத்தல் தொடர்பில் அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
அதன்படி போராட்டங்களின் போது குறைந்தபட்ச பலத்தை அவர்கள் அறிந்த விதத்தில் பயன்படுத்துமாறு பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் (28.02.2023) இடம்பெற்றிருந்தது.

குறைந்தபட்ச பலம்
இதில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் “இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல உள்ளூராட்சி சபைக்கான வேட்பாளர் ஒருவர் தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டமை குறைந்தபட்ச பலத்தின் பிரயோகமா” என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்படும் போது மே தின அணிவகுப்பைத் தவிர வேறு எந்த அணிவகுப்பையும் நடத்துவதற்கு தேர்தல் சட்டத்தின் கீழ் அனுமதியில்லை.
எந்த உத்தரவையும் மீறி அவர்கள் கோட்டையை நோக்கி நேராக அணிவகுத்துச் செல்லும் போதே அவர்களைத் தடுக்க குறைந்தபட்ச பலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எந்த வகையிலும் தடியடி நடத்தாமல், கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர்த்தாரை தாக்குதலைப் பயன்படுத்தியதாக தெரிவித்தனர். சிறு ஆர்ப்பாட்டங்களில் கூட தடியடி நடத்தி விரட்டியடிக்கும் சமயத்தில் அவ்வாறு இவர்களுக்கு செய்யவில்லை.
போராட்டத்தின் போது ஒருவர் தவறி விழுந்து காயமடைவது வழக்கம். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்யக் கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏராளமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் சிறையிலும் அடைக்கப்பட்டனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan