அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி நாளை(28.06.2023) புதன்கிழமை அமைச்சரவை கூடவுள்ளது.
அமைச்சர்களுக்கு பணிப்புரை
இந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலத்திற்கு இதன்போது அனுமதி பெறப்படவுள்ளது.
இது தொடர்பான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு நாடாளுமன்றமும் எதிர்வரும் சனிக்கிழமை கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி எம்.பிக்களுடன் சந்திப்பு
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டம் மாலை 5 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு தௌிவுடுப்பத்துவதற்காகவே இந்த கூட்டம் நடைபெறவுள்ளது
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 15 நிமிடங்கள் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
