பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் விரைவில் நியமனம்: நிதி இராஜாங்க அமைச்சர்
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு விரைவில் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜப்பானுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி; நாடு திரும்பியதும் இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான கடிதத்தை நிதியமைச்சின் செயலாளர் ஜனக ரத்நாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக செயற்பட்டதாக கூறப்பட்டு ஜனக ரத்நாயக்க, அண்மையில் நாடாளுமன்ற பிரேரணை ஒன்றின் ஊடாக பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 23 மணி நேரம் முன்

குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam
