அமைச்சரவையின் அதிரடி முடிவால் எரிபொருள் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி
இலங்கையில் 8 மாதங்களுக்குத் தேவையான பெற்றோல் மற்றும் டீசலை சிங்கப்பூரில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்தத் தகவலை அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண(Ramesh Pathirana) இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை 8 மாதங்களுக்குத் தேவையான பெற்றோல் மற்றும் டீசலுக்கான ஒப்பந்தம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) சமர்ப்பித்தார்.
அந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கமைய, சிங்கப்பூரின் தனியார் நிறுவனம் ஒன்றிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எதிரணியினர் கூறுவது போல் இலங்கையில் தற்போது எரிபொருளுக்குப் பற்றாக்குறை
இல்லை. எதிர்காலத்திலும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது" என தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri