தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்

Sri Lankan Tamils Tamils Mullaitivu
By Shan Sep 26, 2026 11:52 AM GMT
Report

தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு இறுதிநாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் தயகப் பரப்பிலும், புலம்பெர் தேசங்களிலும் 26.09.2026இன்று உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையில், 39ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனது மக்கள் தொடர்பகத்தில் இன்று (26.09.2026) உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.

தமிழ் மக்களின் உரிமை

அந்தவகையில் அகவணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து தியாகதீபம் திலீபனின் உருவப்படத்திற்கு சுடரேற்றப்பட்டதுடன், மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டன.

தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் | Thileeban Memorial Last Day

மேலும் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், சமூகசெயற்பாட்டாளர் மணிவண்ணன் நிறோஜன், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தார்கள்.

தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் | Thileeban Memorial Last Day

முல்லைத்தீவு - விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணி குழுவின் ஏற்பாட்டிலான தியாகி திலீபனின் நினைவூர்தி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல முன்றிலில் இருந்து பரந்தன் முல்லைத்தீவு வழியாக யாழ். நல்லூர் நோக்கி பயணித்துள்ளது.

இதற்கு பெருமளவானோர் தங்களது வணக்கத்தை செலுத்தி வருகின்றனர். 

அந்தவகையில் தியாகதீபம் திலீபன் அவர்களின் உருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர்தூவி அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து திலீபன் அவர்களது உருவப்படம் தாங்கிய நினைவு ஊர்தி யாழ்ப்பாணம் நல்லூரை நோக்கிப் புறப்பட்டது.

மேலும் குறித்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர் வேலாயுதம் கரிகாலன், முன்னாள் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் சண்முகசராசா ஜீவராசா, தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக்குழுவினர், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி - சுடரோன் 

தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் | Thileeban Memorial Last Day

பருத்திதுறை

5 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து வீரகாவியமான தியாகி திலீபன் அவர்களது 39 வது நினைவேந்தலின் இறுதி நாளான இன்று காலை 8:00 மணியிலிருந்து அடையாள உண்ணாவிரதமும், நினைவு அஞ்சலியும் பருத்தித்துறை முருகன் கோயிலடியில் அமைந்துள்ள தியாகி திலீபன் அவர்களது நினைவு தூபியில் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில் இடம்பெற்றது.

தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் | Thileeban Memorial Last Day

தியாகி திலீபன் அவர்கள் மரணித்த நேரத்தில் உண்ணாவிரதம் நிறைவு செய்யப்பட்டு ஈகைச்சுடரினை மாவீரரின் சகோதரன் சி. வேந்தன் ஏற்றி வைக்க மலர் மாலைகளை காணாமல் ஆக்கப்பட்ட போராளி அன்பு அவர்களின் துணைவியார் விஜயபாமா, யாழ்ப்பாணம் மாவட்ட வலிந்து காணாமல் அக்கப்பட்ட சங்க தலைவி  கோதை ஆகியோர் அணிவித்தனர்.

மலர் அஞ்சலியினை மாவீரரின் சகோதரர் கதிர் அவர்கள் ஆரம்பித்து வைக்க தொடர்ந்து அனைவரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் | Thileeban Memorial Last Day

தொடர்ந்து அடையாள உண்ணாவிரதத்தை நிறைவு செய்வதற்கு குளிர் பானங்களை பருத்தித்துறை வர்த்தகர் சங்க தலைவர் இரா மயூரன் வழங்கிவைத்தார்.

தியாகி திலீபன் அவர்களது நினைவாக மரக்கன்றுகளை பருத்தித்துறை நகர சபை தவிசாளர் விசன்ட் டீ போல் டகிளாஸ் போல் வழங்கிவைத்தார். இதில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி. வேந்தன், கட்சி முக்கியஸ்தர் கதிர், பருத்தித்துறை நகர பிதா விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் உப தவிசாளர் இந்திரன், மற்றும் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், அரசியல் சமூக செய்ற்பாட்டாளர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தகவல்- எரிமலை

மட்டக்களப்பு

மட்டக்களப்பில் தியாக தீபம் திலீபனின் 39 ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (26) காந்தி பூங்காவில் அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி சுடர் ஏற்றி எழுச்சியுடன் உணர்வு பூர்வமாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் | Thileeban Memorial Last Day

தியாக தீபம் திலீபனின் 39 வது நினைவேந்தல் இன்று சனிக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் காந்தி பூங்காவில் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன் தமிழரசு கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராசா, செங்கலடி பிரதேச சபை தவிசாளர் முரளிதரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் | Thileeban Memorial Last Day

தகவல் - பவன்

முல்லைத்தீவு


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் அக்கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேச கிளையின் பதில் தலைவரும், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான கிட்டிணபிள்ளை சிவகுரு தலைமையில் முல்லைத்தீவு நகரில் பிரத்தியேகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் இந்த நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு பொதுச் சுடரினை மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் செல்வி இ. நளனி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் | Thileeban Memorial Last Day

தொடர்ந்து துணுக்காய் பிரதேச சபை தவிசாளர் செந்தூரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஜமால்டின் றிஸாம் ஆகியோர் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை துணைத் தவிசாளர் சு.பரந்தாமன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மிக்கேற்பிள்ளை ஜோன்சன் மோகனராஜா ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் | Thileeban Memorial Last Day

இதன்போது கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச சபைகளை சேர்ந்த உறுப்பினர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வின் தொடர்ச்சியாக மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் செல்வி இ. நளனி அவர்களின் அஞ்சலி உரையும் இடம்பெற்றது.

மன்னார்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(26) காலை 10 மணியளவில் மன்னார் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, திலீபனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த அஞ்சலி நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள்,உறுப்பினர்கள்,கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் | Thileeban Memorial Last Day

1987ஆம் ஆண்டு 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இருந்து தன்னுயிரை ஈந்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 26 வரை உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் - ஆசிக்

வவுனியா

தியாகி திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (26.09.2026) வவுனியாவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. ​

வவுனியா மாநகரசபை வாயிலுக்கு அருகில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபி வளாகத்தில் இந்ந இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் | Thileeban Memorial Last Day

​போராளிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஈகைச்சுடரேற்றப்பட்டு தியாகி திலீபனின் உருவப்படத்திற்கு மலரஞ்சலியும் அகவணக்கமும் செலுத்தப்பட்டிருந்தது.

தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் | Thileeban Memorial Last Day

​இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன், மாநகரசபை உறுப்பினரானார்கள், போராளிகள் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். 

மன்னார்

மன்னாரில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (26) காலை 11 மணியளவில் இடம்பெற்றது.

இதன் போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு திலீபனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் | Thileeban Memorial Last Day

குறித்த அஞ்சலி நிகழ்வில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கப் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

1987 ஆம் ஆண்டு 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இருந்து தன்னுயிரை ஈந்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 26 வரை உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தகவல்- ஆசிக்

திருகோணமலை

தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தலின் 12ஆம் நாள் மற்றும் இறுதிநாள் நிகழ்வு இன்று (26) சனிக்கிழமை மாலை வெருகல் பிரதேச சபை மண்டபத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதான சுடர் ஏற்றப்பட்டு, தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், விளக்கேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் | Thileeban Memorial Last Day

அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் கலந்து கொண்ட தொழிலதிபர் குமார் ஜெயக்குமாரன் அவர்கள் தியாக தீபம் திலீபனுக்கு தனது மரியாதையை செலுத்தியதுடன், முன்னாள் போராளிகளுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்கி, அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.

“முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தையும் எதிர்கால முன்னேற்றத்தையும் மேம்படுத்துவதற்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை வழங்க நான் தொடர்ந்து ஆதரவளிப்பேன்” என குமார் ஜெயக்குமாரன் தெரிவித்தார்.


தகவல் - ரொஷான்

8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US