பெரும் பரபரப்புக்கு மத்தியில் ஜனாதிபதி தலைமையில் கூடும் அமைச்சரவை
பெரும் பரபரப்புக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவைக் கூட்டம் நாளை திங்கட்கிழமை மாலை நடைபெறவுள்ளது.
தொடர் விலையேற்றத்துக்கு மக்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
எனவே, இவ்விவகாரம் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி முக்கிய சில முடிவுகள் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, இலங்கையில் இன்றும் சில பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து பொதியின் விலை 1,850 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொள்கலன் போக்குவரத்துக் கட்டணமும் 60 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பான அறிவித்தல் நாளை வெளியாகவுள்ளது.
இதற்கிடையில் ரயில் கட்டணத்தை அதிகரிக்குமாறும் கோரிக்கை
முன்வைக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam