பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்க அமைச்சரவை அனுமதி
பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் பதவிக்காலத்தை மேலும் 03 மாதங்களுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான பத்திரத்தை மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
பதவி காலம்
இந்நிலையிலேயே பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 60 வயது நிறைவடைவதை தொடர்ந்து அவர் கடந்த மார்ச் (26.03.2023)ஆம் திகதி ஓய்வுபெற்றுச் செல்லவிருந்தார்.
இவ்வாறான சூழலில் அவரது சேவையை மேலும் மூன்று மாத காலங்களுக்கு நீடிக்கவே அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இதற்கிணங்க அவர் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குப் பொலிஸ்மா அதிபர் பதவியை
வகிப்பார் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.