பொலிஸ் அதிகாரிகளுக்கு மின்சார வாகனங்கள்! அமைச்சரவை வழங்கியுள்ள ஒப்புதல்
பொலிஸ் அதிகாரிகளுக்கு மின்சார வாகனங்கள் மற்றும் மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.
உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் முதல் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வரையிலான பொலிஸ் அதிகாரிகளுக்கு 400 மின்சார கார்களை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
86 மில்லியன் நிதி ஒதுக்கீடு
இந்த வாகனங்கள் ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து குத்தகை அடிப்படையில் பெறப்பட உள்ளன. இதற்காக ரூ. 86 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பொலிஸ் முதல் பொலிஸ் ஆய்வாளர் வரையிலான பொலிஸ் அதிகாரிகளுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள்கள் சுங்க வரி இல்லாமல் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.
மேலும், அதிகாரிகள் மின்சார மோட்டார் சைக்கிள்களை வாங்குவதற்கு ஏதுவாக, நிதி மூலம் கடன் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan