சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பணம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்
தமது சொந்த விவசாயத்துக்காக சேதனப் பசளைகளை உற்பத்தி செய்து பயன்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக 2 ஹெக்டேருக்கு (5 ஏக்கர்) மிகையில்லாத நிலத்துக்கு, ஹெக்டேருக்கு 12,500 ரூபாவை செலுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2021/2022 பெரும்போகத்தின் போது சுமார் 800,000 ஹெக்டேயர் நெற்செய்கைக்கு சேதனப் பசளையின் தேவையைப் பூர்த்தி செய்ய விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, முக்கியமாக விவசாய மேம்பாட்டுத் துறையின் வழிகாட்டுதலின் கீழ், தரமான சேதனப் பசளைகளை உற்பத்தி செய்ய விவசாயிகளை வழிநடத்த அமைச்சு எதிர்பார்க்கிறது.
அத்துடன் உரிமம் பெற்ற உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் சேதனப் பசளைகளின் அளவை அதிகரிக்கவும் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
