இலங்கை - இந்திய மின்னுற்பத்தி திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கூட்டு முயற்சியாக, திருகோணமலையில் உள்ள சம்பூரில் 50 மெகாவாட் மற்றும் 70 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவது தொடர்பான திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திட்டம் தொடர்பில் மேலும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு ஏற்ப இந்த அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சம்பூர் திட்டம்
இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து தெரிவிக்கையில்,
சம்பூரில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலக்கரி மின்னுற்பத்தி நிலைய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின் தேசிய அணல் மின்சாரக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றால் கூட்டு தொழில்முயற்சியால் நிறுவப்பட்ட Trincomalee Power Company Ltd மூலம் உத்தேச 50 மெகாவோற் கூருய மின்னுற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
