முன்னாள் ஜனாதிபதிகளின் மாளிகைகள் தொடர்பிலான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட மாளிகைகளின் பயன்பாடு மற்றும் அவை, சிறந்த முறையில் பயன்படுத்தப்படுவது குறித்து மறுஆய்வு செய்யப்பட உள்ளது.
இது தொடர்பில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட ஒன்றிணைந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகைகள்
முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகள் உட்பட அரச சொத்துக்கள்,பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டு இந்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ், கொழும்பு 07 மற்றும் கொழும்பு 05 இல் சுமார் 50 அரசாங்க பங்களாக்கள் அமைந்துள்ளன.
கொழும்பு, கண்டி, நுவரெலியா, மஹியங்கனை, அனுராதபுரம், கதிர்காமம், யாழ்ப்பாணம், எம்பிலிப்பிட்டிய மற்றும் பெந்தோட்டையில், ஜனாதிபதி செயலக நிர்வாகத்தின் கீழ் பல ஜனாதிபதி மாளிகைகள் உள்ளன.
சொத்துக்கள்
கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் மற்றும் கொழும்பு 02 இல் உள்ள “விசும்பய”, முன்னர் பல அரச தலைவர்களின் உத்தியோகபூர்வ இல்லமாகவும், தற்போது நகர அபிவிருத்தி அதிகாரசபையால் நிர்வகிக்கப்படும் உத்தியோகபூர்வ இல்லமாகவும் உள்ளது.

பிரதம மந்திரி அலுவலகத்தின் கீழ் நுவரெலியாவிலும் பங்களா ஒன்று அமைந்துள்ளது.
தற்போது, இந்த சொத்துக்கள் அவற்றின் முழு திறனுக்கும் பயன்படுத்தப்படவில்லை, எனவே, இந்த சொத்துக்கள் அதிக உற்பத்தி மற்றும் பொருளாதார ரீதியாக நன்மை பயக்கும் வகையில் பயன்படுத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது
இந்த அரசு சொத்துக்களைப் பராமரிப்பதற்காக பெருமளவு நிதி செலவழிக்கப்பட்டுள்ள போதும் அவற்றினால் குறைவான பலனே ஈட்டப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பராசக்தி படத்திற்கு எதிராக மோசமான விமர்சனங்களை பரப்பும் நபர்கள்.. கொந்தளித்த பராசக்தி பட நடிகர் Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri