அமைச்சரவை தொடர்பில் ரணிலின் முடிவு: நேற்று வெளியிடப்பட்ட தகவல்
இலங்கையில் தற்போதுள்ள கொந்தளிப்பான நிலைமைக்கு மத்தியில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில் கொழும்பில் உள்ள வளுகாராமய ரஜமஹா விகாரைக்கு நேற்று விஜயம் செய்த போது அமைச்சரவை தொடர்பிலான முடிவு குறித்து ரணில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதன்டி அமைச்சரவையை அமைப்பது குறித்து தாம் இதுவரையில் முடிவு செய்யவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
என்ற போதும் அமைச்சரவை நியமனங்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும், சமூக ஊடங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன.
அதன்படி, பெரும்பாலான தகவலின் அடிப்படையில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 20ஆக மட்டுப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
அத்துடன் பெருமளவு நிறுவனங்களைக் கொண்ட பெரிய அமைச்சுக்களுக்கு மாத்திரமே பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
என்ற போதும் ரணில் விக்ரமசிங்க அமைச்சுப் பதவிகளைப் பெற மறுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடுவதற்கு முன் அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
பிரதமராக பதவியேற்றது ஏன்..! ரணில் விளக்கம் |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
