சில அமைச்சரவை பத்திரங்கள் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்படுகிறது - அமைச்சர் விமல் வீரவங்ச
சில அமைச்சரவை பத்திரங்கள் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்படுவதாகவும் அவை போதுமான கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தப்படுவதில்லை எனவும் அமைச்சர் விமல் வீரவங்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
நல்ல விடயமாக இருந்தாலும் அதனை செயற்படுத்தும் முன்னர், பல திட்டங்களுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தொற்று நோய் ஒன்று பரவி வரும் சந்தர்ப்பத்தில் உரம் தொடர்பான பிரச்சினை சம்பந்தமாக இதனை விட திட்டமிட்டு நடைமுறைப்படுத்தல்களை முன்னெடுத்திருக்க வேண்டும்.
சில விடயங்கள் குறித்து போதுமான கலந்துரையாடல்கள் அரசாங்கத்தில் நடத்தப்படுமாயின் சில விடயங்களை இதனை விட தவறின்றி செய்ய முடியும்.
தான் இது தொடர்பாக அமைச்சரவையிலும் அமைச்சரவைக்கு வெளியிலும் வலியுறுத்தி வருவதாகவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam