அமைச்சரவையின் விலகலுக்கு அப்பால், தோல்விக்கான பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டும்!
ஊரடங்கு வேளையிலும் தமது எதிர்ப்புகளை காட்டும் அளவில் இலங்கை மக்கள் கொந்தளித்து போயுள்ளனர்.
எனவே இது இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு மற்றும் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வருபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்தநிலையில் அமைச்சர்கள் பதவி விலகினால் அல்லது காபந்து அரசாங்கம் அமைக்கப்பட்டால் மாத்திரம் இந்த பிரச்சினையை தீர்க்கமுடியாது. இலங்கையில் நிர்வாகத்தை திறம்பட கொண்டு செல்ல பிரித்தானிய ராஜ்யம் பிரித்தாளும் முறையை செயற்படுத்தியது.
எனினும் சுதந்திரத்துக்கு பின்னர் மாறி மாறி வந்த இலங்கை அரசாங்கங்களும் தமது சொந்த மக்கள் மத்தியில் இந்த பிரித்தாளும் கொள்கையை நடைமுறைப்படுத்தின.
இதுவே உள்நாட்டில் கிளர்ச்சிகளுக்கும் நீண்ட கொடிய போர் ஒன்றுக்கும் வித்திட்டது.
2009ம் ஆண்டு போர் முடிவடைந்த நிலையில் அந்த போர் முடிவை போர் வெற்றியாக அறிவித்து, நாட்டை ஆட்சி செய்து வந்த ஒரு பிரிவினர், இன்று அதே மக்கள் விமர்சிக்கும் அளவுக்கு சென்றுள்ளனர்.
வரலாற்றில் போர் வெற்றியை அடைந்த ஒரு கலப்பு பொருளாதாரம் கொண்ட அரசாங்கம், ஆட்சியை தொடர முடியாத நிலையையே காணக்கூடியதாக இருந்துள்ளது.
இதற்கு இலங்கையும் தற்போது உதாரணமாக மாறியுள்ளது. போர் ஒன்றை வெற்றிக்கொள்வதற்கு கலப்பு பொருளாதாரத்தை மையப்படுத்திய ஒரு அரசாங்கம், ஏனைய நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்கிறது.
இலங்கையை பொறுத்தவரை அது தெளிவாகவே நடந்தது. 30 வருடப் போரை எப்படியாவது வெற்றி கொள்ளவேண்டும் என்பதற்காக மஹிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசாங்கம் இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா என்ற அனைத்து நாடுகளின் உதவிகளையும் பெற்றுக்கொண்டது.
இந்த நாடுகள் வெறுமனே இலங்கையின் ராஜபக்சவின் நட்புக்காக தமது உதவியை நல்கிகவில்லை.
அத்துடன் இலங்கையில் தமது நாட்டின் எதிர்கால நலன் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் உள்ளூர் மற்றும் சர்வதேச வளர்ச்சி, தமக்கு அச்சுறுத்தலாக வந்துவிடும் என்ற அச்சமும் குறித்த நாடுகளி;ல் இலங்கைக்கு உதவ காரணமாக இருந்தன.
இதன்படி இலங்கை அரசாங்கத்தின் கருத்துப்படி போர் வெற்றி கொள்ளப்பட்டது.
எனினும் போருடன் தொடர்புடைய தமிழ் மக்களின் மனங்களை வெற்றி; கொள்ள இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது.
இதுவே உள்ளூரி;ல் போரின் பின்னர் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஏற்பட்ட முதலாவது விளைவாக அமைந்து விட்டது.
அதேநேரம் போரின்போது இலங்கைக்கு உதவிய நாடுகளுக்கு இலங்கை சந்தோசத்தை கொடுக்கவேண்டியிருந்தது.
இதன் தொடர்ச்சியே சீனா, இந்தியா அமெரிக்கா ஆகிய நாடுகளை தவிர்த்து விட்டு தமது பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளை முன்னெடுக்க முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டமையாகும்.
இந்த நிலை இலங்கையில் ஆட்சிக்கு வரும் எந்தவொரு அரசாங்கத்துக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.
இதுவே இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.
எனவே கட்சி அரசியலை புறந்தள்ளி வைத்து நடத்த விடயங்களுக்கு பொறுப்பை ஏற்று பொதுக்கொள்கை ஒன்றின் அடிப்படையில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே இலங்கைக்கு விடிவு உண்டு என்பதை அறுதியிட்டு கூறமுடியும்.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
