நுவரெலியாவில் கெப் வண்டி விபத்து: 8 பேர் படுகாயம்
ராகலையில் இருந்து அம்பாறையின் சியம்பலாண்டுவ நோக்கி பயணித்த பொலேரோ ரக கெப் வண்டியொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்றையதினம்(20.04.2025) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த 8 பேரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
ராகலை, உடுவமதுரவில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த ஒரு குழுவினர் சியம்பலாண்டுவவுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனர்.
இதன்போது, வலப்பனை, நில்தண்டஹின்ன அம்பன்வெல்ல பகுதியில் அவர்கள் பயணித்த கெப் வண்டியில் திடீரென தடுப்புக்கட்டை (பிரேக்) செயழிழந்ததன் காரணமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |