வர்த்தகர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!
விற்பனை செய்ய, சேமித்து வைக்க அல்லது விநியோகிக்க வைத்திருக்கும் பொருட்களின் உற்பத்தி மூலத்தை உறுதிப்படுத்தக்கூடிய சரியான ஆவணங்கள் அல்லது ரசீதுகளை வர்த்தகர்கள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையால் வெளியிடப்பட்ட இலக்கம் 83 இன் கீழ் உத்தரவுப்படி, உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அனைத்து வர்த்தகர்களுக்கும் 2022 ஏப்ரல் 27 ஆம் திகதி முதல் இந்த விதிமுறை அமலில் உள்ளது.
விநியோகஸ்தரின் பெயர் மற்றும் முகவரி, கொள்முதல் செய்யப்பட்ட திகதி மற்றும் கொள்முதல் விலை, பொருளின் வகை, அளவு மற்றும் தொகுதி எண் என்பனவற்றை தெரிந்து கொள்ளக் கூடிய ஆவணங்களை பேண வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"பொருட்கள் உள்ளன, ஆனால் யாரிடம் வாங்கப்பட்டது என்று கூற முடியாது" என்ற நிலை வியாபாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகும் என்று அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
முக்கியமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு உரிய ரசீது இல்லாதபோது விநியோக முறையைக் கண்டறிவது கடினமாகிறது. சந்தைப் பரிசோதனைகள் மற்றும் சோதனைகளின் போது இந்த ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.
சட்டத்தை மீறுபவர்களின் பொருட்கள் சான்றுகளாகப் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சரியான ஆவணங்களைப் பேணி, பொறுப்புடன் வியாபாரம் செய்யும் நேர்மையான வர்த்தகர்களைப் பாதுகாப்பதே இந்த சட்டத்தைச் நடைமுறைப்படுத்துவதன் முதன்மை நோக்கமாகும் என அதிகாரசபை தெளிவுபடுத்தியுள்ளது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan