மேர்வின் சில்வாவிற்கு உளவியல் சிகிச்சை வழங்க வேண்டும்: சிவஞானம் காட்டம் (video)
எனது பார்வையில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு ழூளை பழுது உள்ளது போல் தெரிகிறது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு நேற்று (14.08.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேர்வின் அரசியலில் இல்லாத கட்சிகள் இல்லை. எல்லா கட்சியிலும் இருந்து, எல்லா கட்சியினரும் அவரை துரத்தியே உள்ளார்கள். தான் இருக்கின்றார் என்பதை காண்பிப்பதற்காக மடமைத்தனமான பேச்சுக்களை பேசுகின்றார்.
சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவரை கணக்கில் எடுப்பதே மிகவும் பிழை. அவரை கவனிக்காமல் அவர் பாட்டிலேயே செல்வதற்கு விட்டுவிட வேண்டும். உண்மையாகவே இந்த நாட்டில் சட்டம், ஒழுங்குகள் இருக்கின்றது என்றால் பொலிஸார் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஏனென்றால் இவர் ஒன்று
வன்முறையை தூண்டுகின்றார். இரண்டாவது இனமோதலை உருவாக்குவதற்கு
முயற்சிக்கின்றார்.
இவருக்கு இனமோதலை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு மனநல பிரச்சினை உள்ளதென்றால் அதற்கான சிகிச்சையை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை.
இல்லையேல் இவரை இந்த இரண்டு குற்றத்திற்காகவும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
வன்முறையை தூண்டி தலையை கொய்வது என்று கூறுகின்றார். கொய்வதற்கு இது என்ன தேயிலை கொழுந்தா? இவையெல்லாம் உளநிலை சரியில்லாதவர் பேசும் பேச்சு . ஆகவே இவரை கணக்கில் எடுப்பது என்பது ஒரு பிழை எனவே நான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
